இலங்கையில் ஏற்பட்ட வன்முறையை கண்டிக்கிறது OIC
உலக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் அயாத் மதனி தனது அனுதாபத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கை முஸ்லிம்கள் பொறுமையை பேணுமாறும் கேட்டுள்ளார்.
இலங்கையின் அளுத்கம, பேருவளை மற்றும் தர்கா நகரில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறையை தாம் வன்மையாக கண்டிப் பதாகவும் அந்த வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.
பலபேர் காயம் அடைந்தும் சிலர் மரணத்தையும் தழுவியுள்ளனர் அத்துடன் சொத்து உடமைகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை முஸ்லிம்கள் இன்று நேற்று அந்நாட்டில் வாழ்வார்கள் அல்ல அவர்கள் பல ஆயிரம் வருடங்களாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் எப்போதும் மாற்று மத சமூகத்துடன் நீண்ட காலமாக நட்பை பேணி வருவர்கள்.
முஸ்லிம்களின் பங்களிப்பு இலங்கையின் பொருளாதாரத்துக்கும் கலாச்சாரத்துக்கும் மற்றும் எல்லாத் துறையிலும் அவசியமா இருக்கின்றது.
இன்னிலைல் BBS தீவிரவாதிகளின் வன்முறை அதிகரித்துக் கொண்டு இருப்பதால் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கு பயம் மற்றும் அவ நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அதிகாரிகள் தீர விசாரித்து இந்த கலவரத்துக்கு பொறுப்பான தீவிர வாதியை சட்டத்தின் முன் நிறுத்தி தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்@ http://www.arabnews.com/news/588426
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment