கல்முனை பிரதேசத்தில் ஹர்த்தால்

அளுத்கம,பேருவள முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களை கண்டித்து கல்முனை பிரதேசத்தில் (18-06-2014) முழுக் கடையடைப்பு ஹர்த்தால் இடம்பெற்றது கல்முனையில் உள்ள வர்த்தக நிலையங்கள் ,பொதுசனத்தை,அரச அலுவலகங்கள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்பட்டதுடன் இயல்பு நிலை முற்றாக பாதிக்கப்பட்டிருந்தது . வீதிகளில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை இடம் பெறுகின்றது கடந்த சனிக்கிழமை முதல் அளுத்கம, பேருவளை, தர்ஹாநகர் உள்ளிட்ட பிரதேசங்களில் பேரினவாதிகளானா பொதுபலசேனா அமைப்பினரால் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை முதல் மாலை வரை அமைதியான முறையில் ஹர்த்தல் அனுஷ்ட்டிக்க அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் மற்றும் அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்கது

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X