இலங்கையின் பொருளாதாரம் பாதிக்கப் பட்டுள்ளது
இலங்கை முஸ்லிம்கள் மீது பெரும் பான்மையினர் கடந்த 15ம் திகதியில் இருந்து தொடர்ந்தும் தாக்குதல் நடாத்துவதால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளதாக இலங்கை மத்திய வாங்கி தெரிவித்துள்ளது.
நாட்டின் அனைத்து இடங்களிலும் தொடர்ந்து கொண்டிருக்கும் ஹர்த்தால் காரணமாக அதிகளவிலான நிருவனம்கள் மற்றும் வியாபார நிலையங்கள் தொடர்ந்து மூடப் பட்டுள்ளதால் வர்த்தகத்தில் பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இது இன்னும் சில நாட்களுக்கு தொடர்ந்தால் இலங்கையின் பொருளாதரத்தில் மீளமுடியாத பாரிய இழப்பு ஏற்படும் என்றும் இலங்கை அரசாங்கம் முஸ்லிம்களுக்கு தகுந்த பாதுகாப்பு கொடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள கலவரத்தை சுமுகமான நிலைக்கு கொண்டு வராவிடத்து வெளிநாட்டு உல்லாச பயணிகளையும் அவர்களின் முதலீடுகளை இலங்கை இழக்க நேரிடும் என்று இலங்கை மத்திய வங்கி எச்சரித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment