சிங்கள ஊடகங்கள் எவ்வாறு சித்தரித்துள்ளது முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப் பட்ட கலவரத்தை.
ஜூன் 12ம் திகதி (பொசன் தினத்தன்று) ஒரு புத்த தேரர் பன்சலை சடங்கில் கலந்து கொள்வதற்காக ஆட்டோவில் தர்கா நகரில் உள்ள பத்தகொட வீதியின் ஊடக சென்று கொண்டிருக்கும்போது தேரரின் ஆட்டோ சாரதிக்கும் அந்த வழியால் மோட்டார் பைசிக்கலில் சென்ற முஸ்லிம் சகோதரருக்கும் வாய் த்தகராறு ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்ததாகவும் அதனால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் போனதாக அந்த தேரர் அங்கு கூடியிருந்த சிங்கள மக்களிடம் கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து சடங்கில் கலந்து கொண்ட மக்கள் இந்த தேரரை அழுத்கமையில் உள்ள பொலிசிக்கு கூட்டிச்சென்று முறைப்பாடு செயிதுள்ளனர். அதன் பின்னர் அளுத்கம பொலிசார் மூன்று முஸ்லிம்களை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர் எதிர்வரும் 25ம் திகதி வரைக்கும்.
இந்த செய்தி BBS யின் காதில் விழுந்தது அதனை தொடர்ந்து BBS அறிவித்தார்கள் ஜூன் 15ம் திகதி அவர்களின் கூட்டம் அளுத்கம நகரில் நடைபெறும் என்று.
இதை அறிந்த கழுத்தற மாவட்ட அமைச்சர் குமார வெல்கம DIG அனுர சென நாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்வு கொண்டு BBSன் கூட்டத்துக்கு அனுமதி கொடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளார்.அதற்கு பதிலளித்த DIG அனுர அழுத்கமையில் பாதுகாப்பு பலமாக இருப்பதாகவும் அத்துடன் தான் BBSயிடம் இது பற்றி பேசியதாகவும் அவர்கள் உறுதி அளித்துள்ளார்கள் எவ்வித அசம்பாவிதமும் நடை பெறாது என்றும் தெரிவித்துள்ளார் அந்த DIG
ஜூன் 15ம் திகதி BBSயின் அளுத்கம கூட்டத்தில் பேசிய கல கொட அத்தே கனானசார தேரா முஸ்லிம்களை பற்றி சரமாரியாக மோசமான வார்த்தைகளில் பேசியுள்ளார்.அதன் பின்னர் தர்கா நகரில் பாதிக்கப் பட்டதாகக் கூறப் படும் தேரரை அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அழுத்கமைநகரின் ஊடக ஊர்வலம் கொண்டு சென்று கொண்டிருக்கும் போது பக்கத்தில் இருந்த முஸ்லிம் (மசூதி) பள்ளியில் இருந்து கல் வீச்சு வந்ததாகவும் அதனை தொடர்ந்து அந்த கலவரம் நடந்ததாக இந்த சிங்கள ஊடகங்கள் தெரிவிக்கின்றது.
சம்பவம் நடந்த தினம் ஜனாதிபதி நாட்டில் இல்லாததால் அவருக்கு நிறைய அமைச்சர்கள் தொலை பேசிமூலம் இந்த கலவரத்தைப் பற்றி தெரிவத்துள்ளனர்.
ஜனாதிபதி நாடு திரும்பியதும் உடனடியாக நீதி அமைச்சர் ஹக்கீமை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். காரணம் ஜனாதிபதி நாடு திரும்பும் முன்னர் அமைச்சர் ஹக்கீம் நாட்டில் உள்ள அனைத்து முஸ்லிம் நாட்டு தூதுவர்களையும் மற்றும் அமரிக்கா,பிரித்தானிய நாட்டு தூதுவர்களையும் அழைத்து நிலைமையை விபரித்துள்ளார்.
ஜனாதிபதியுடனான கூட்டத்தில் அமளி துமளி ஏற்பாட்டுள்ளது அப்போது ஜனாதிபதி கோவத்தில் இவ்வாறு கூறியுள்ளார் “inna, inna thava deval thiyanawa katha karanna” or “stay back, stay back, there are more things to talk.”
http://www.sundaytimes.lk/140622/columns/104559-104559.html
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
Thanks
Thanks
Post a Comment