புதிய சட்டம் அமுல்படுத்தப் படுகிறது வீட்டுப் பணியாளர்களை பாதுகாக்க.


















சவுதி அரேபியாவில் வேலைக்கு வரும் வீட்டுப்பணியாக்களை(house maid/ boy/farmer/ house driver) பாதுகாக்க புதிய சட்டத்தை அமுல் படுத்திகிறது லேபர் அமைச்சு.

1.    பணியாளர்களின் ஒப்பந்த பத்திரத்தில் அவர்களின் வேலை(எந்த வகையான  வேலை செய்ய வேண்டும் என்பதைகுறிப்பிடல் வேண்டும்) எத்தனை வருடம் வேலை செய்ய வேண்டும் போன்றவற்றை அந்த பத்திரத்தில் குறிப்பிட வேண்டும்.

2.    பணியாளரை வேலைக்கு அமத்தி மூன்று மாத காலத்துக்குள் அந்த பணியாளர் திறன் பட வேலை செய்ய வில்லை என்றால் பணியாளரின் ஒப்பந்தத்தை ரத்து செயிவதற்கு எஜமானாருக்கு உரிமையுண்டு.

3.    ஒப்பந்த பத்திரத்தில் குறிப்பிட்ட வேலையைத் தவிர மேலதிக வேலை செய்வதற்கு பணியாளரை வீட்டு எஜமானார் அல்லது எஜமானி அல்லது வீட்டின் அங்கத்தவர்கள் பணியாளரை  துன்புறுத்தக் கூடாது.

4.    . மூன்று காரணங்களை தவிர பணியாளரின் சம்பளத்தை எஜமானர் துண்டிக்கக்  கூடாது அவைகள்  1) பணியாளர் ஏதும் சட்டக் குற்றங்கள் புரிந்து அதற்காக  நீதிமன்றதுக்கு தண்டப் பணம்  செலுத்தவேண்டி இருந்தால். 2) பணியாளருக்கு முற்பணம் செலுத்தப் பட்டு இருந்தால். 3) பணியாளர், எஜமானாரின் வீட்டுப் பொருட்களுக்கு வேண்டுமென்றே சேதம் ஏற்படுத்தல் போன்ற காரணங்களை தவிர. அதுவும் பணியளுருக்கு செலுத்த வேண்டிய சம்பளத்தில்  அரைவாசி தொகையை மாத்திரம் துண்டிக்கனும்.

5.    பணியாளரின் 2 வருட ஒப்பந்த முடிவில் அவருக்கு 1 மாதச் சம்பளம் செலுத்தப்பட்ட  விடுமுறை வழங்கல் வேண்டும்.

6.    வாரத்தில் ஒரு நாள் விடுமுறை வழங்கல்  வேண்டும்.
7.    பணியாளர் எஜமானால்/எஜமானியல் கொடுக்கப் பட்ட வேலைய திறன் பட செய்தல் வேண்டும். அக் குடும்பதுக்கு,குழந்தைகளுக்கு,பெரியவர்களுக்கு மற்றும் பொருட்களுக்கு எவ்வித சேதமும் விளைவிக்கக் கூடாது.  அத்துடன் அவர்களின் குடும்ப ரகசியங்களை பேணிப் பாதுகாக்கணும்.
8.    புதிய சட்டத்துக்கு அமைய பணியாளர் வேலை செய்ய மறுக்கக் கூடாது தற்ககாரணம் இல்லாமல், அத்துடன் சொந்த தேவைக்காக வேலை செய்தல் கூடாது மற்றும் சவுதியின் இஸ்லாமிய சட்டத்தை மதித்து நடத்தல் வேண்டும்.
ஆங்கிலத்தில் வாசிக்க இந்த லிங்கை க்ளிக் பண்ணுங்க.  http://www.arabnews.com/news/578841
தமிழாக்கம்: colonyking Abdulcader Muzammil

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X