கத்தார் அரசாங்கம் அதனுடைய லேபர் law வில் சில மாற்றங்களை செய்து இருக்கிறது

எல்லோருக்கும் தெரிந்த விடயம்தான் இருந்தாலும் சிலருக்கு சரியாய் புரியாமல் சங்கடப் படுகிறார்கள் அவர்களுக்கு மட்டும் இது.

கத்தார் அரசாங்கம் அதனுடைய லேபர் law வில் சில மாற்றங்களை செய்து இருக்கிறது. 

1. தற்போதுள்ள கபாலா முறையை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக contract முறையை அறிமுகம் செய்துள்ளது. அதாவது 2 வருட contract ல் ஒரு கம்பெனிக்கு வேலைக்கு சேர்ந்தால் அந்த 2 வருடம் முடிந்ததும் நாம் விரும்பினால் வேற கம்பெனிக்கு மாறி வேலை செய்யலாம் இதற்கு கம்பனியின் NOC letter (no objection certificate :தடையில்லா சான்றுதல்) தேவையில்லை. நீங்கள் exit போக விரும்பினால் நீங்களாவே labor ministry webisite ல் அல்லது labor ministry அலுவலகத்தில் விண்ணபிக்க முடியும். விண்ணபித்து 72 மணிக்குள் (3days) உங்களுக்கு அனுமதி கிடைக்கும். (குறிப்பு: உங்களுடைய contract முடிந்த பிறகுதான் நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.)

நீங்கள் உங்களுடைய நாட்டுக்கு exit ல் போய்விட்டால் மீண்டும் கட்டார் போக விரும்பினால் எந்த தண்டப் பணமும் செலுத்தாமல் கட்டாருக்கு போகலாம்.

2. உங்களுடைய பாஸ் போர்ட் உங்களுடன்தான் இருக்கணும் அதை உங்கள் கம்பெனி வைத்துக் கொள்ள முடியாது. அவ்வாறு அந்த கம்பெனி வைத்துக்கொண்டால் 1 பாஸ் போர்ட் கு தலா 50,000.00 ரியல் தண்டப் பணமாக அந்த கம்பெனி labor ministry க்கு செலுத்த வேண்டும்.

3. எல்லோருடைய சம்பளத்தையும் கம்பனிகள் மாத முதல் வாரத்தில் வங்கி மூலம் கொடுக்கணும்.

4. நல்ல நிலையில் உள்ள ரூம் கொடுக்கணும்
5. மெடிக்கல் இன்சூரன்ஸ் ஒவ்வெரு வேலை ஆளுக்கும் இருக்கணும்.

குறிப்பு
புதிதாக கத்தாருக்கு செல்ல இருக்கும் அனைவரும் உங்களுடைய contract period பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். குறிப்பாக உங்களுடைய contract agreement பேப்பர் ஆங்கிலத்தில் இருக்கும் அதை மொழி பெயர்ப்பாளரிடம் கொடுத்து சரியாய் புரிந்து கொள்வது நல்லது.
நன்றி, அப்துல் காதர் முஸம்மில்

No comments:

Contact Form

Name

Email *

Message *

தினமும் சூடான செய்திகள் உடனுக்குடன் | இங்கு கிடைக்கும் பாருங்கள்

X